உயர்மின் கோபுரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய சிறுவன்


உயர்மின் கோபுரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய சிறுவன்
x

கீரமங்கலத்தில் 17 வயது சிறுவன் உயர் மின் கோபுரத்தில் தூக்கில் தொங்கியவாறு பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக சிறுவனின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புதுக்கோட்டை

டாஸ்மாக் பார்

கீரமங்கலம் மேற்கு, பேட்டை தெருவை சேர்ந்தவர் அல்லாபிச்சை. இவருடைய மனைவி ஹைசத் பீவி. இவர்களுடைய மகன் ஹாலித் முகமது (வயது 17). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அல்லாபிச்சை இறந்து விட்டார். இதையடுத்து, ஹாலித் முகமது 8-ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கீரமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று காலை அதே பகுதியில் வயல்வெளியில் முள்செடிகள் அடந்த பகுதியில் உள்ள உயர் மின் கோபுரத்தில் சேலையில் தூக்கிட்டு ஹாலித் முகமது பிணமாக கிடந்தார். சற்று தூரத்தில் மதுபாட்டில், தண்ணீர் பாட்டில், மிச்சர், சிகரெட் துண்டு ஆகியவை கிடந்தது.

சாவில் சந்தேகம்

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ஹாலித் முகமது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரது உறவினர்கள் ஹாலித் முகமது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஹாலித் முகமது தனது நண்பர்களின் செல்போன்களுக்கு நேற்று முன்தினம் மாலை கண்ணீர் வடிக்கும் பொம்மை படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் ஹைசத் பீவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story