திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன், மோட்டார் சைக்கிள் மோதி பலி


திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன், மோட்டார் சைக்கிள் மோதி பலி
x

சாலையை கடக்க முயன்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பலியானான். அவனுடைய தாய் கண்முன் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

மதுரை

திருமங்கலம்

சாலையை கடக்க முயன்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பலியானான். அவனுடைய தாய் கண்முன் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

தாயுடன் சென்றான்

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்களுடைய 3 வயது மகன் கவின்.

சுகந்தி தனது அண்ணன் சுரேசுடன் உறவினரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிந்துப்பட்டி சென்றார். அப்போது மகன் கவினையும் அவர் அழைத்து சென்றார். செல்லும் வழியில் சுரேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். கவின் தனது மாமாவிடம் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு திடீரென சாலையை கடக்க முயன்றான்.

பலி

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

தாய் கண்முன் சிறுவன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story