இரும்பு தடுப்புகளை மறைத்த முட்புதர்
இரும்பு தடுப்புகளை மறைத்த முட்புதரை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் காக்கங்கரை ஏரி உள்ளது. ஏரிக்கரையில் விபத்துகளை தடுக்க இருபுறமும் இரும்புக்கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த இரும்புக்கம்பி தடுப்பு வெளியே தெரியாதவாறு முட்புதர்கள் வளர்ந்து மூடி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் ஏரிக்கரையோரம் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும்படியும், அதில் எதிரொலிப்பான் விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story