ஏலகிரி மலைப்பாதையில் உடைந்த தடுப்புச்சுவர்


ஏலகிரி மலைப்பாதையில் உடைந்த தடுப்புச்சுவர்
x

ஏலகிரி மலைப்பாதையில் உடைந்த தடுப்புச்சுவரை கட்டவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவுக்கும் தமிழக புலவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளன. கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோர தடுப்புகள் உடைந்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story