இடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடைபோடும் தேர்தல்ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


இடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடைபோடும் தேர்தல்ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2023 7:30 PM GMT (Updated: 25 Jan 2023 7:30 PM GMT)

அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

ஈரோடு

இடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடைபோடும் தேர்தல் என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

எடைபோடும் தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பணிமனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் நேற்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டாலும், நாங்கள் தி.மு.க. வேட்பாளராக நினைத்துதான் தேர்தல் பணியை தொடங்கி இருக்கிறோம். ஜனநாயகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் நடைமுறை என்பது ஆளும் ஆட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தலாகும்.

இடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடை போடும் தேர்தல் என்றே கூறலாம். எதிர்க்கட்சி பலமாக இருக்கும் பட்சத்தில், ஆளும் கட்சி போட்டி போட்டால்தான் வெற்றி பெற முடியும். இந்த இலக்கணத்தை உடைத்து எறிந்து ஜனநாயக அடிப்படையில் கூட்டணி கட்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை அளித்து உள்ளார். தி.மு.க. இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாடு நண்பர்கள் மத்தியில் இருந்தாலும்கூட, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நமது வேட்பாளர் என்ற அடிப்படையில் போட்டியிடுகிறாா்.

இலக்கு

காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு பதவிகளை வகித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், தி.மு.க.வுக்கும் பிரிக்க முடியாத ஒரு உறவு இருக்கிறது. அந்த உறவு தந்தை பெரியாரின் குடும்பத்தை சார்ந்தவர் என்பதுதான். எனவே நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்பதே இலக்கு. மறைந்த திருமகன் ஈவெரா நினைத்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நமக்கு வேட்பாளராக கிடைத்து இருக்கிறார். அவரை வெற்றி பெற வைத்து, திருமகன் ஈவெரா நினைத்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, செந்தில்பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story