விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள183 ஊராட்சிகளில் உழவர்களுக்கான முகாம்இன்று நடக்கிறது


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள183 ஊராட்சிகளில் உழவர்களுக்கான முகாம்இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 183 ஊராட்சிகளில் உழவர்களுக்கான முகாம் இன்று நடக்கிறது.

விழுப்புரம்


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 183 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களை தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட 183 கிராம ஊராட்சிகளில் உழவர்களுக்கான முகாம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்குதல், உழவன் செயலியை விவசாயிகளின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து இடுபொருள் தேவையை பதிவு செய்தல், பயிர் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல், பி.எம். கிசான் திட்டத்தில் புதிய நபர்களை இணைத்தல், ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்களை பெறுதல், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கம் போன்ற சேவைகள் மட்டுமல்லாது இத்திட்டத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட இடுபொருட்கள் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே இம்முகாம்களில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story