வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் 12-ந்தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே, வாக்காளர்கள் மேற்படி சிறப்பு முகாமின் போது அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6பி பெற்று பூர்த்தி செய்து வழங்கி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

மேலும் இணையவழி முறையில் வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம் 6பி-ஐ https://www.nvsp.in மற்றும் https://voterportal.eci.gov.in ஆகிய இணையதங்கள் மூலமாகவும் Voters Helplime Mobile App என்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இப்பணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 64.71 சதவீத வாக்காளர்கள் மட்டுமே தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.


Next Story