வாகன சோதனையில் ஈடுபட்டபோது கார் மோதியதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம்
சாத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்கள் மீது கார் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்கள் மீது கார் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கார் மோதியது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு சோதனை சாவடியில் வாகன சோதனையில் போலீசார் வீரசிங்கம் (வயது 35), மாரீஸ்வரன் (32) ஆகிய இருவரும் ஈடுபட்டனர். அப்போது ெநல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(50) என்பவர் காரில் நெய்வேலிக்கு கோவில்பட்டி-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த கார் தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீஸ்காரர்கள் வீரசிங்கம், மாரீஸ்வரன் ஆகிய 2 பேர் மீதும் மோதியது.
இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
2 போலீஸ்காரர்கள் காயம்
பின்னர் மேல்சிகிச்சைக்காக வீரசிங்கம் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், மாரீஸ்வரன் சிவகாசியில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே முத்துக்குமாரை சாத்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.