மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து நடந்தது.
கரூர்
லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபாகரன் (வயது 24) இவர் சம்பவத்தன்று திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே அரவிந்த் பாபு என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பிரபாகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயம் அடைந்த பிரபாகரன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story