தீவட்டிப்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் மின்கம்பத்தில் மோதி நின்ற கார்5 பேர் உயிர் தப்பினர்


தீவட்டிப்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் மின்கம்பத்தில் மோதி நின்ற கார்5 பேர் உயிர் தப்பினர்
x
சேலம்

ஓமலூர்

பெங்களூருவை சேர்ந்த 5 பேர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதை பார்க்க வந்தனர். பின்னர் அவர்கள் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு காரில் திரும்பி சென்றனர். அப்போது தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கியதுடன் அங்கிருந்த மின்கம்பத்தை உடைத்து நின்றது.

இதில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். கம்பம் உடைந்து மின்கம்பி அறுந்து காரின் மீது விழுந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 5 பேரும் உயிர் தப்பினர். இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story