மரத்தில் கார் மோதி விபத்து; வாலிபர் பலி


மரத்தில் கார் மோதி விபத்து; வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:30 AM IST (Updated: 19 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மரத்தில் கார் மோதி விபத்து; வாலிபர் பலி

திண்டுக்கல்


பழனி இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் பழனி நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் உதவி அலுவலராக உள்ளார். இவருடைய மனைவி மாலதி (52). இவர்களது மகன் அஜய்ராஜ் (22). இந்த நிலையில் தாயும், மகனும் சிவகங்கையில் நடந்த கோவில் திருவிழாவுக்கு காரில் சென்றுவிட்டு நேற்று காலையில் பழனிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அஜய்ராஜ் ஓட்டினார்.

திண்டுக்கல்-நத்தம் சாலையில் சாணார்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொருங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கிய அஜய்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் விபத்து நடந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த பெத்தாம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (45), காருக்குள் சிக்கிய மாலதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story