மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிதனியார் நிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிதனியார் நிறுவன ஊழியர் பலி
x

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

தனியார் நிறுவன ஊழியர்

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. லாரி டிரைவர். இவரது மகன் பிரசாந்த் (வயது30). பி.எஸ்சி. பட்டதாரியான பிரசாந்த் ராசிபுரம் அருகே உள்ள சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின்பு பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்வதற்காக ராசிபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் உள்ள ஸ்ரீநகர் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இது பற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த பிரசாந்த் மீது கார் மோதிவிட்டு சென்றதா? என்பது பற்றி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story