மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது; 2 பேர் பலி
அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
சொந்த வேலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (55). இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் வேலைைய முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுப்புராஜ் ஓட்டி வந்துள்ளார். இவர்கள் நான்கு வழிச்சாலை உடையநாதபுரம் விலக்கில் வந்து கொண்டு இருந்தனர்.
2 பேர் பலி
அப்போது சாலையை கடக்க முயன்ற போது மதுரை -தூத்துக்குடி நோக்கி சென்ற கார், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வேல்ராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்ைசக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.