நான்கு வழிச்சாலையில் உருண்டோடி தலைகுப்புற கவிழ்ந்த கார்; 5 பேர் படுகாயம்


நான்கு வழிச்சாலையில் உருண்டோடி தலைகுப்புற கவிழ்ந்த கார்; 5 பேர் படுகாயம்
x

வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் உருண்டோடி தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

ஈரோடு மாவட்டம் பெரியசேமூரை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். அவருடைய மகன்கன் மோகன் (வயது 22), கிருஷ்ணன் (19). இவர்களது உறவினர்கள் நாமக்கல்லை சேர்ந்த மணிகண்டன் (32), சதீஷ் (35), அய்யப்பன் (27). இவர்கள் 5 பேரும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி, இன்று 5 பேரும் காரில் ஈரோட்டில் இருந்து திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்டனர். காரை கிருஷ்ணன் ஓட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காசிபாளையம் பகுதியில், நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். மேம்பாலத்தில் இருந்து கார் இறங்கியபோது, பெண் ஒருவர் சாலையை திடீரென்று கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது மோதாமல் கிருஷ்ணன் காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், நான்கு வழிச்சாலையில் உருண்டோடி, நடுவே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி மறுபுற சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் வந்த கிருஷ்ணன், மோகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், கூம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கார் நான்கு வழிச்சாலையில் உருண்டோடி தலைகுப்புற கவிழ்ந்த காட்சிகள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


Related Tags :
Next Story