வயலுக்குள் கவிழ்ந்த கார்; 4 பேர் காயம்
வயலுக்குள் கவிழ்ந்த கார்; 4 பேர் காயம்
கன்னியாகுமரி
கொல்லங்கோடு:
கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி வள்ளவிளையை சேர்ந்த 4 வாலிபர்கள் ஒரு காரில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக புறப்பட்டனர். கொல்லங்கோடு அருகே வெங்குளம்கரை பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த குளக்கரை பகுதியில் அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்புசுவரில் மோதி வயலுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 வாலிபர்களும் சத்தம் போட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கியிருந்த வாலிபர்களை மீட்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
அதைதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story