கன்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார்


கன்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார்
x

சூளகிரி அருகே கன்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

லாரிக்குள் புகுந்த கார்

பெங்களூருவில் இருந்து சொகுசு கார் ஒன்று சென்னை நோக்கி நேற்று முன்தினம் சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பக்கமுள்ள கொல்லப்பள்ளி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடி, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி அதன் அடியில் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அரியானா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் உள்பட 4 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி தவித்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தின் காரணமாக கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து சென்று கார் மற்றும் கன்டெய்னர் லாரி ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story