பள்ளத்தில் பாய்ந்த கார்; டிரைவர் காயம்


பள்ளத்தில் பாய்ந்த கார்; டிரைவர் காயம்
x

திற்பரப்பில் பள்ளத்தில் பாய்ந்த கார்; டிரைவர் காயம்

கன்னியாகுமரி

திருவட்டார்,

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி நேற்றுமுன்தினம் திற்பரப்புக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்திருந்தனர். ஆனால் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் திணறினர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தம்பதியர் குழந்தைகளுடன் திற்பரப்புக்கு சொகுசு காரில் வந்தனர். காரை நிறுத்த இடம் இல்லாததால் அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அவர்கள் இறங்கி விட்டனர்.

பின்னர் டிரைவர் மட்டும் காரை நிறுத்துவதற்காக வேறு இடத்தை நோக்கி ஓட்டி சென்றார்.அப்போது இடநெருக்கடி காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது.

அந்த சமயத்தில் காரை திறந்து டிரைவர் குதித்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு காரை மீட்கும் பணி நடந்தது. எனவே இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் கார் நிறுத்துவதற்கான போதிய வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story