வீட்டின் மீது பாய்ந்த கார்
கூடலூர் அருகே வீட்டின் மீது பாய்ந்து கார் விபத்துக்குள்ளானது.
நீலகிரி
கூடலூர்,
கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் 4 பேர் ஊட்டிக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் அருகே பால்மேடு பகுதியில் வந்த போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியவாறு சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து, வீட்டின் மீது பாய்ந்தது. இதில் கார் மற்றும் வீடு சேதம் அடைந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் சிக்கி இருந்த 4 பேரை மீட்டனர். அவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், அவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story