கூகுள் வரைபடத்தை பார்த்து ஓட்டிய கார் வெள்ளத்தில் சிக்கியது


கூகுள் வரைபடத்தை பார்த்து ஓட்டிய கார் வெள்ளத்தில் சிக்கியது
x

கூகுள் வரைபடத்தை பார்த்து ஓட்டிய கார் வெள்ளத்தில் சிக்கியது. இதில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்து வரும் மழையால் நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது. ஓசூர் அருகே பேகேப்பள்ளி பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு சர்ஜாபுராவை சேர்ந்த சேர்ந்த ராகேஷ், அவருடைய குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஓசூர் வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு செல்ல கூகுள் வரைபடத்தைப் போட்டு கொண்டு காரில் சென்றனர்.

பத்திரமாக மீட்பு

அப்போது, கூகுள் வரைபடம், தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலத்துக்கு மேல் வழி காண்பித்து அழைத்து சென்றுள்ளது. அதனை பின்பற்றி காரை ஓட்டிச்சென்ற அவர்கள், தரைப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ராகேஷ் அவசர போலீஸ் உதவியை நாடினார். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் எந்திரம் மூலம் காரில் இருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.


Next Story