மின்மாற்றியில் சரக்கு வேன் மோதியது
மின்மாற்றியில் சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டம், கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38), சொரிபாறைப்பட்டி சேர்ந்தவர் ராகுல்காந்தி (17). இவர்கள் இருவரும் ஒரு சரக்கு வேனில் கொட்டாம்பட்டி அருகே உள்ள வண்ணாயிருப்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை கார்த்தி ஓட்டினார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள முத்துப்பட்டி விலக்கு என்ற இடத்தில் வேன் வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வாகனம் நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் பக்கவாட்டில் உரசி விட்டு நிற்காமல் சென்றது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி மீது மோதியது. இதனிடையே சாலையோரத்தில் இருந்த புற்கள் மீது தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார்த்தி ராகுல்காந்தி ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.