சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; பெண் பலி


சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; பெண் பலி
x

திருக்கோவிலூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே அருந்தங்குடி பகுதியை சேர்ந்த 32 பேர் சரக்கு வாகனம் ஒன்றில் பேரால் கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். அந்த சரக்கு வாகனத்தை மருதங்குடி கிராமத்தை சேர்ந்த வடிவேல் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார். பொன்னியந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த 32 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருதங்குடி கிராமத்தை சேர்ந்த தாடிக்காரன் மனைவி பழனியம்மாள் (வயது 60) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விபத்து தொடர்பாக சரக்கு வாகன டிரைவர் வடிவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story