வீட்டுமனை தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு


வீட்டுமனை தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே நத்தமேடு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி வள்ளியம்மை (வயது 80). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி, வேல்முருகன் ஆகிய இருவரும் சென்று, தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், உங்களுக்கு விக்கிரவாண்டியில் வீட்டுமனை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய வள்ளியம்மை, ரூ.1 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அவர்கள் இருவரும் வள்ளியம்மைக்கு வீட்டுமனை வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து வள்ளியம்மை, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஜெயந்தி, வேல்முருகன் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story