குழந்தைகள் நலக்குழு பெண் ஆலோசகர் உள்பட 2 பேர் மீது வழக்கு
குழந்தைகள் நலக்குழு பெண் ஆலோசகர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரணை செய்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த 2 பேர் கோர்ட்டுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்காமலும், ஒப்படைக்காமலும் காப்பகத்தில் தன்னிச்சையாக வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி முத்துகுமரவேல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, ஆலோசகர் மகேஸ்வரி ஆகிய 2 பேர் மீது போக்சோ சட்டப்பிரிவில் உள்ள ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story