இளம்பெண்ணை தாக்கிய அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்ணை தாக்கிய அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகராறு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவானி (வயது 26). சம்பவத்தன்று இவருக்கும், இவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பஸ் டிரைவரான அருணாச்சலம் (52) என்பவர் ஏன் அடிக்கடி தகராறு செய்து தொல்லை தருவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
3 பேர் மீது வழக்கு
இதில் ஆத்திரம் அடைந்த அருணாச்சலம், அவரது மகன் ஆகாஷ், மருமகள் நிலவு ஆகியோர் பவானியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பவானியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து பவானி வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து பவானி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கிய அருணாச்சலம், ஆகாஷ், நிலவு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.