அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு
x

திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கீழத்தெரு,வடக்கு தெரு, மேலதெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.. உரிய அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக நெற்குப்பை கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் நெற்குப்பை வடக்கு தெருவை சேர்ந்த அழகியமெய்யப்பன் (வயது 70),காங்கேயம்(35), கீழ தெருவை சேர்ந்த சேக்கப்பன்(60), மேல தெருவை சேர்ந்த சிங்காரம்(68),நவணிக்களத்தை சேர்ந்த சின்னையா(60) ஆகிய 5 பேர் மீது நெற்குப்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story