பெண்ணை கொடுமைப்படுத்திய 6 பேர் மீது வழக்கு


பெண்ணை கொடுமைப்படுத்திய 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கொடுமைப்படுத்தியது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே வடகீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் திருமூர்த்தி (வயது 27). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் செல்லியம்பாளைத்தை சேர்ந்த சங்கீதா (24) என்பவருக்கும் கடந்த 13-6-2022 அன்று திருமணம் நடந்தது. .இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கீதாவின் மாமனார் சின்னசாமி, மாமியார் அங்கம்மாள் மற்றும் சசிகுமார், செவ்வந்தி, சண்முகம் ஆகியோர் ஒன்று சேர்ந்து சங்கீதாவை அசிங்கமாக திட்டி தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு திருமூர்த்தி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின் பேரில் திருமூர்த்தி, அங்கம்மாள், சின்னசாமி, சசிகுமார், செவ்வந்தி, சண்முகம் ஆகிய 6 பேர் மீது கள்ளக்குறிச்சி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story