10-ம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீது வழக்கு


10-ம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே 10-ம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே ஒலக்கூர் கூட்டு சாலையில் ஆண்டவர் மருந்து கடை உள்ளது. இதனை திண்டிவனம் ஆர்.எஸ். பிள்ளை வீதியை சேர்ந்த சாதிக் பாஷா(வயது 52) என்பவர் நடத்தி வருகிறார். இவர் மருத்துவத்துக்கு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் ஒலக்கூர் போலீசார், திண்டிவனம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சாந்தகுமாரி தலைமையிலான குழுவினர் மருந்து கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சாதிக் பாஷாவிடம் நடத்திய விசாரணையில், 10-ம் வகுப்பு படித்து விட்டு மருந்து கடை நடத்தி வந்ததும், அங்கேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சாதிக்பாஷா மீது ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மருந்து கடைக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.


Next Story