மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு


மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம்

சேலம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 20). இவர், அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் (27) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு அவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். முறைப்படி விவகாரத்து எதுவும் பெறப்படவில்லை. சரவணன் என்னிடம் நகை, பணம் ஆகியவற்றை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தார். இந்த நிலையில் என்னை ஏமாற்றிவிட்டு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனிடம் விசாரணை நடத்தினர்.


Next Story