இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய மில் தொழிலாளி மீது வழக்கு
இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய மில் தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் காட்டன் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பள்ளப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 25) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணகுமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story