பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்கு


பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள பட்டவர்த்தி கடைவீதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் கல்யாணசுந்தரம் மகன் பிரபு (வயது33). இவர் தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மணல்மேடு சப்-இன்ஸ்பெக்டர் பெட்டிக்கடையில் சோதனை செய்தார். அப்பொது அந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து பிரபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story