சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

சிதம்பரம்

சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பிரகாஷ் (வயது 29). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து கடந்த 20.2.2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமியை அவர் பாலியல் பாலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து புவனகிரி சமூக நல ஒன்றிய விரிவாக்க அலுவலர் புஷ்பவள்ளி கொடுத்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story