சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
x

நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கீழ செவல் பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா மகன் சுடலைமணி (வயது 30). இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததால், அவர்கள் 2 பேருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த சேரன்மாதேவி பெண்கள் நல பாதுகாப்பு அலுவலர் ஞானஜெயா, முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் சுடலைமணி, அவருடைய தந்தை கந்தையா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் சுடலைமணி மீது போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story