சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
x

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 27). இவர் மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் போலீசில் தெரிவித்தது. அதன்பேரில் மதுரை தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story