பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு


பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
x

பெண்ணை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையைச் சேர்ந்தவர் ரகுபதி. இவருடைய மனைவி ராமபிரபாவதி (வயது 43). இவரிடம் ரகுபதியின் தங்கை கீதா என்பவர் ரூ.16 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி தரும்படி ராமபிரபாவதி பலமுறை கீதா மற்றும் அவருடைய கணவர் சுந்தரிடம் கேட்டும் பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு பணம் குறித்து ராமபிரபாவதி அவர்களிடம் கேட்டதற்கு, வீட்டிற்கு வந்து வாங்கி செல்லுங்கள் என்று கீதா மற்றும் அவரது கணவர் சுந்தர் கூறியுள்ளனர். பணத்தை வாங்குவதற்காக ராமபிரபாவதி திருத்தணி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கீதா வீட்டிற்கு வந்தார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமபிரபாவதியை கீதா மற்றும் அவரது கணவர் சுந்தர் அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ராமபிரபாவதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story