அதிவேகமாக மினி பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது வழக்கு


அதிவேகமாக மினி பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அதிவேகமாக மினி பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது வழக்கு

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை திங்கள்சந்தை ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மினி பஸ் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி பஸ்சை ஓட்டி வந்த டிரைவரான நடுத்தேரியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 29) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story