தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு


தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு
x

தம்பதியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சூசையப்பர்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 52). விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அடைக்கலசாமி (48) என்பவருக்கும் திருமண பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரோக்கியசாமி, அவரது மனைவி ஆரோக்கிய ரோஸ்லி ஆகியோரை அடைக்கலசாமி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கிய ரோஸ்லி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது மகன் பென்னிகில் பார்ட் புகார் அளித்தார். அதன்பேரில் அடைக்கலசாமி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story