காதல் மனைவியை சித்ரவதை செய்த வாலிபர் மீது வழக்கு


காதல் மனைவியை சித்ரவதை செய்த வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Jun 2023 12:00 AM IST (Updated: 28 Jun 2023 12:01 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் காதல் மனைவியை சித்ரவதை செய்த வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் சவுமியா (23). இவரும் விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்த சேத்தன்(34) என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு விழுப்புரம் மார்க்கெட் தெருவில் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. சேத்தன், எந்தநேரமும் செல்போனை பார்த்துக்கொண்டே இருந்ததால் அவரது மனைவி சவுமியா தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சேத்தன், சவுமியாவை திட்டி தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சேத்தன் மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story