கணவனை வெட்டிய பெண் மீது வழக்கு
கணவனை வெட்டிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கொழிஞ்சிபட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 44). இவருடைய மனைவி ராஜலட்சுமி. இந்தநிலையில் வீட்டை ஏன் சுத்தப்படுத்தவில்லை? என ராமர் கேட்டதாகவும், இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜலட்சுமி வீட்டில் இருந்த அருவாள் மனையால் ராமரின் காலில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராமர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜலட்சுமி மீது கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story