அக்காளை தாக்கிய தம்பி மீது வழக்கு
அக்காளை தாக்கிய தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை தெப்பக்குளம் தெருவை சேர்ந்தவர் சிரும்பாயி (வயது 51). இவர் தனது மகள் கிருஷ்ணவேணி என்பவரை தனது தம்பி கோபால் (43) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து கிருஷ்ணவேணி கடந்த 4 ஆண்டுகளாக தனது தாயாருடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று சிறும்பாயி வீட்டுக்கு வந்த கோபால் தனது அக்காவிடம் தகராறு செய்து அவரை திட்டி தாக்கியுள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அங்கு வருவதை பார்த்த கோபால் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் காயமடைந்த சிரும்பாயி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சிறும்பாயி அளித்த புகாரின் பேரில் கோபால் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.