வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு


வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு
x

வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி(வயது 20). இவர் அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளையை படம் பிடித்து, தனது செல்போனில் வாட்ஸ்-அப்பில் பிடி மாடு என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அதே ஊரை சேர்ந்த அஜித் (27) மற்றும் சிலர் சேர்ந்து, சஞ்சீவியிடம் சென்று எதற்காக எங்கள் உறவினர் மாட்டை பிடி மாடு என பதிவிட்டுள்ளாய் என்று கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த சஞ்சீவி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவியை தாக்கிய அஜித் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story