பணத்தை திருப்பி கேட்டவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது வழக்கு


பணத்தை திருப்பி கேட்டவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது வழக்கு
x

பணத்தை திருப்பி கேட்டவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள சின்னகவுண்டன்பட்டியை ேசர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவரிடம், புரசம்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் வெளிநாடு செல்வதாக கூறி ரூ.2 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கருப்பசாமி தான் கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி தருமாறு சக்திவேல் வீட்டிற்கு சென்று கேட்டு, அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதையடுத்து கள்ளை மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த கருப்பசாமியை, சக்திவேல் எனது வீட்டிற்கு வந்து பணம் கேட்டு என்னையும், எனது மனைவியும் அசிங்கப்படுத்தி விட்டாய் என கூறி இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story