பெண் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு


பெண் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
x

பெண் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் இருபாநாடு கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விவேக் (24). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விவேக் குடிபோதையில் சிவக்குமாரிடம் தகராறு செய்துள்ளார். இதை அருகில் இருந்த மாணிக்கம் மனைவி முத்து தட்டிகேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் இருவரையும் தாக்கி உள்ளார். இதில் லேசான காயமடைந்த இருவரும் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஏம்பல் போலீசார் விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story