ஆத்தூர் டாக்டரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்-2 பேர் மீது வழக்குப்பதிவு


ஆத்தூர் டாக்டரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்-2 பேர் மீது வழக்குப்பதிவு
x

ஆத்தூர் டாக்டரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் வடக்கு உடையார்பாளையம் சடகோபன் தெருவில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் கோவிந்தராஜ். இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், டாக்டரான என்னை அப்பமசமுத்திரம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நவீன் ஆகிய 2 பேரும் அணுகினர். அப்போது விதிமுறைகளை மீறி மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எனவே பொதுநல வழக்கு தொடர்ந்து கட்டிடத்தை தரைமட்டமாக்குவேன். வழக்கு தொடராமல் இருக்க ரூ.50 லட்சம் தர வேண்டும் என ராஜேந்திரன் கேட்டு மிரட்டினார் என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், நவீன் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story