கூடலூரில் அனுமதியின்றி மரம் வெட்டியதாக தேவாலய செயலாளர் மீது வழக்கு
கூடலூரில் அனுமதியின்றி மரம் வெட்டியதாக தேவாலய செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீலகிரி
கூடலூர்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் பகுதியில் தேவாலய கட்டுப்பாட்டில் சட்டப்பிரிவு-17 நிலம் உள்ளது. இங்கு உள்ள காபி தோட்டத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனக்காப்பாளர் மாதவன் உள்ளிட்ட வன ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது சட்டப்பிரிவு-17 வகை நிலத்தில் அனுமதி இன்றி மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேவாலய செயலாளர் ஞானசேகர் மீது கூடலூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story