கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
பொன்மலைப்பட்டி, ஜூலை.9-
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் பெஞ்சமின் ஞானபிரகாசம் (வயது 79). இவர் 2014-ம் ஆண்டு மே மாதம் பொன்மலை பட்டியில் உள்ள சாமுண்டீஸ்வரி பைனான்ஸ் உரிமையாளரான அருள் என்பவரிடம் வட்டிக்கு ரூ.75 ஆயிரம் வாங்கியுள்ளார். அதன் பின் ஒவ்வொரு மாதமும் அசல் மற்றும் வட்டியை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தியுள்ளார். முழுமையாக பணம் செலுத்திய பிறகு அவர் கொடுத்த ஆவணங்களை திருப்பி கேட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூடுதலாக வட்டி தர வேண்டும் என மிரட்டினாராம். இது குறித்து பெஞ்சமின் ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூடுதலாக வட்டி கேட்டு மிரட்டிய அருள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story