எருது விடும் விழாக் குழுவினர் மீது வழக்குப் பதிவு
மாடுமுட்டி வாலிபர் பலியானதால் எருது விடும் விழாக் குழுவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமம் சாமுண்டி வட்டத்தில் கடந்த 29-ந் தேதி எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் மாடுகள் முட்டி 27 பேர் காயமடைந்தனர். அவர்களில் அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியை சேர்ந்த குசேலன் மகன் விக்ரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து எருது விடும் விழா குழுவினர் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் இந்த சம்பவம் நடந்ததாக அச்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் நேற்று ஜோலார்பேட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு, விழா குழுவினர் சீனிவாசன் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story