ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமி மீது வழக்கு


ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமி மீது வழக்கு
x

ஆசிரியை கன்னத்தில் அறைந்த போதை ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

வடகாடு:

வடகாடு அருகே கன்னியான்கொல்லையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் ஆசிரியையாக ஆலங்குடி மாருதி நகரை சேர்ந்த கலையரசன் மனைவி சித்ராதேவி (வயது 47) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வாணக்கன்காடு வடக்கு பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (44) என்பவர் குடிபோதையில் பள்ளியில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அங்கு நாற்காலியில் அமர்ந்து இருந்த ஆசிரியை சித்ராதேவியை எழுந்திரு என்று கூறி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ராதேவி வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரைவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story