பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
விருத்தாசலம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
கடலூர்
கம்மாபுரம்
விருத்தாசலத்தை அடுத்த கோட்டேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மனைவி பழனியம்மாள்(வயது 45). சம்பவத்தன்று இவர் அவரது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த குமார்(37) என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட பழனியம்மாளை குமார் ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் குமார் மீது ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story