சிதம்பரம் அருகேசிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு


சிதம்பரம் அருகேசிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள 17 வயது சிறுமியை கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் திருமாவளவன்(வயது 22) என்பவர் திருமணம் செய்துள்ளதாகவும், அந்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கீரப்பாளையம் ஒன்றிய சமூக நல அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சமூக நல அலுவலர் செல்வி தலைமையிலான அதிகாரிகள் கீழ் அனுவம்பட்டு கிராமத்துக்கு சென்று திருமாவளவன் வீட்டில் இருந்தவர்களிடம் சிறுமி திருமணம் விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமாவளவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சமூக நல அதிகாரி செல்வி குழந்தை திருமணம் செய்த திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருமாவளவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story