பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு:தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில்


பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு:தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி புதூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தம்பதிக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

மின்வாரிய ஊழியர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் மகாலட்சுமி காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி வீரம்மாள் (வயது 59). இவர் கடந்த 26.6.2015 அன்று அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து உள்ளார். அப்போது அங்கு வந்த புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் கிருஷ்ணன் (50), அவருடைய மனைவி மல்லிகா (45) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், மல்லிகா ஆகியோர் சேர்ந்து வீரம்மாளை துடைப்பத்தால் அடித்து அவமானப்படுத்தினர். இதில் மனம் உடைந்த வீரம்மாள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

10 ஆண்டு ஜெயில்

இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் கிருஷ்ணன், மல்லிகா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மாதவராமானுஜம் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணன், மல்லிகா ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். மேலும் கிருஷ்ணனுக்கு ரூ.21 ஆயிரமும், மல்லிகாவுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எல்லம்மாள் ஆஜர் ஆனார்.


Next Story